|

ரீசார்ஜ் செய்யத் தேவையற்ற பேட்டரி?

ரீசார்ஜ் தேவையற்ற அதிநவீன செல்போன் பேட்டரியை கண்டறியும் பணியில், ஜெர்மனியை சேர்ந்த விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதற்காக ஜெர்மன் நாட்டின் சிஜென் பல்கலைக்கழகம் (University of Siegen) அமைத்துள்ள விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை வகித்து வரும் ஹன்ஸ்-ஜோர்க் டெய்ஸ்ரோத், அறிவியல் பத்திரிக்கை ஒன்றுக்கு கூறியுள்ள தகவலில், ரீசார்ஜ் தேவையற்ற பேட்டரி விரைவில் சாத்தியமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.மொபைல்போன், லேப்டாப் கம்ப்யூட்டர்கள், ஐ-பாட் (iPod) உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் ரீசார்ஜபிள் லித்தியம்-அயன் பேட்டரிகளே (rechargeable lithium-ion batteries) தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஆனால், ஜெர்மன் விஞ்ஞானிகள் தயாரிக்க உள்ள நவீன பேட்டரிகள் லித்தியம், பாஸ்பரஸ், சல்பர் மற்றும் புரோமைன் அணுக்களால் தயார் செய்யப்பட்ட அர்கைரோடைட் (argyrodite) என்ற தாதுப்பொருளை கொண்டு உருவாக்கப்படும் என ஹன்ஸ்-ஜோர்க் கூறியுள்ளார்

Posted by Anonymous on 12:11. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "ரீசார்ஜ் செய்யத் தேவையற்ற பேட்டரி?"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added