இன்ஸ்டாகிராமின் அடுத்த அதிரடி அறிமுகம்

இன்ஸ்டாகிராம் செயலியில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் ( videos ) மட்டும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த செயலி அடுத்தக்கட்ட அம்சங்களை வழங்க தயாராகி விட்டது. இதனால் பேஸ்புக்குக்கு பின்னைடைவு ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.


சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இன்ஸ்டாகிராம் செயலியில் வொய்ஸ் ( voice ) மற்றும் வீடியோ அழைப்பு ( call ) அம்சங்கள் விரைவில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையிலான தகவல்கள் ஆண்ட்ராய்டு ஆல்ஃபா மூலம் தெரியவந்திருக்கிறது.
அழைப்பு ஐகான் மட்டுமின்றி அழைப்புகள் வீடியோ அழைப்பு சார்ந்த விவரங்களும் இந்த செயலியில் வழங்கப்பட இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக பிரைவேட் சாட் விண்டோவில் நேவிகேஷன் பாரில் வீடியோ அழைப்பு அம்சம் வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.

வொய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் இன்ஸ்டாகிராம் செயலி ஸ்னாப்சாட் செயலிக்கு மாற்றாக அமைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஐ.ஓ.எஸ். பதிப்பில் வீடியோ அழைப்புகளுக்கான தெரிவுகள் ட்விட்டரில் பதிவிடப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இன்ஸ்டாகிராம் இருக்கும் நிலையில் நண்பர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள செயலியை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் இனி இருக்காது. ஃபேஸ்புக்கின் பல்வேறு செயலிகளில் ஏற்கனவே வொய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலியில் வொய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு அம்சங்கள் வெளியாகும் காலம் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
இதனால் பேஸ்புக்குக்கு பின்னைடைவு ஏற்படுமா என்றால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

21:19 | Posted in , | Read More »

Recently Commented

Recently Added