|

ஆன்லைன் வங்கியில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

அதிவேகத்தில் வளர்ந்து வரும் இன்றைய உலகில் அனைத்துத் துறைகளும் கணினி மயம் ஆகிவிட்டது , உலகில் எந்த மூலையில் இருந்தும் சேவைகளைப் பெறுமாறு இணையத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. வங்கியியலும் இதிலிருந்து விதிவிலக்காக ? இன்று அனைத்துப் பிரபலமான வங்கிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய சேவைகளான மின்சாரப் பயனீட்டுக்கட்டணம், ரயில் பயணச்சீட்டு, விமானப்பயணச்சீட்டு , பணப்பரிமாற்றம் எனப் வேறு பல சேவைகளை இணையத்தின் மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் பயன்பெறுமாறு தமது வங்கிக்கணக்கு வசதிகளை அமைத்துள்ளன

கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்  • உங்களுடைய வங்கிக் கணக்கு இலக்கங்களையும் கடவுச் சொற்களையும் (PIN NUMBER) கடன் அட்டை (Credit card) எண்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும்  • உங்கள் வங்கிக் கணக்கு விபரங்களை மின்னஞ்சலில் கேட்டு வங்கி முகவரியிலிருந்து வருவது போல் பாவனை செய்து வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்பும் போதே இது போன்ற திருட்டுக்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற கடிதங்கள் வரும் போது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டியது நமது கடமையாகும்  • ந்த ஒரு பொறுப்புள்ள வங்கியும் தனது வாடிக்கையாளரின் கடவுச் சொல்லைக் கேட்டு மின்மடல் அனுப்பவோ அல்லது தொலைபேசி மூலம் அழைப்போ செய்யாதுஅப்படி ஏதும் தொலைபேசி அழைப்புக்கள் வந்தால் உடனே உங்கள் தொலைபேசி இணைப்பை கட்பண்ணிவிடவும்  • உங்கள் வங்கி கன்னக்குகள் சம்பந்தமான தகவல்களை செல்போனில் சேமித்து வைக்க வேண்டாம் அப்படி சேமித்து வைத்திருந்தால் உடனே அழித்து விடுங்கள்  • உங்களுடைய பெயர் மற்றும் முகவரி உள்ள கடிதங்கள் அல்லது துண்டுகள் இருந்தால் உடனே கிழித்து எறிந்துவிடுங்கள்  • கடைகளில் கார்டு மூலமாக பணம் செலுத்தும்போது, கார்டை உங்கள் பார்வையிலிருந்து மறைக்காமல் பார்த்துக்கொள்ளவும்  • ATMல் பணம் எடுக்கும்போது உங்கள் அருகில் யாரும் நிற்கிறார்களா என அவதானிக்கவும்  • உங்கள் கார்டு தொலைந்து போனால், உடனடியாக தெரிவிக்கவும்  • நீங்கள் எதாவது வங்கிகள் சம்பதமாக செய்யும் பொழுது https:// என இருக்க வேண்டும் இதை முக்கியமாக அவதானிக்க வேண்டும்Posted by TAMIL on 08:59. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

2 மறுமொழிகள் for "ஆன்லைன் வங்கியில் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added