|

வீடியோ டவுன்லோடுகள் வைரஸ் எச்சரிக்கை தேவை

தற்போது ஆன்லைன் நேயர்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு YOUTUBE உள்ளிட்ட பல இணையதளங்களிலிருந்து வீடியோ கிளிப்பிங்குகளை டவுன்லோடு செய்வதுதான். இதனால் கணினிகளின் பாதுகாப்பிற்கு பல ஆபத்துகள் நேர்வதாக கணினி பாதுகாப்பு ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


YOUTUBE மற்றும் பிற நட்புறவு இணையதளங்களில் ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. அவற்றை பார்த்து ரசிப்பது மற்றும் டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு அனுப்புவது என்பது ஆன்லைன் நேயர்களிடையே தற்போது பிரபலமடைந்து வரும் பழக்க வழக்கம். உரை ரீதியிலான பொருளடக்கங்களை விட வீடியோ கிளிப்பிங்குகளை பார்ப்பது, டவுன்லோடு செய்வது, அவற்றை பல நண்பர்களுக்கு அனுப்புவது தினசரி நடவடிக்கையாகிவிட்டது.

ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது வைரஸ் கிருமி சமிக்ஞை உள்ள குறியீடையும் நாம் சேர்த்தே டவுன்லோடு செய்து விடுகிறோம் என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை. இந்த வைரஸ் சமிக்ஞை உங்கள் கணிகளை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. உங்கள் நிதி நிலைமை, வங்கிக் கணக்கு, உங்கள் ஆன்லைன் வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அப்படியே திருடிச் செல்கிறது.

ஜியார்ஜியா தொழில்நுட்ப தகவல் நிறுவனம் இது குறித்து கூறுகையில், தற்போதைய வெப் 2.0 தொழில்நுட்பம் பல்வேறு வகையான டவுன் லோடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பயனாளர் அனுபவம் விரிவடைகிறது எனினும் திருட்டு சமிக்ஞைகளையும் சேர்த்தே நாம் டவுன்லோடு செய்வதும் நடக்கிறது என்று எச்சரித்துள்ளது.

ஃபிளாஷ் மீடியா ஃபைல் ஃபார்மேட்டுகள் அதிக பிரபலமடைந்து வரும் இக்காலக் கட்டங்களில், ஒரு மீடியா ஃபைலை டவுன்லோடு செய்யும்போதே ஹேக்கர்களிடம் கணினிகளை ஒப்படைப்பதும் நடைபெறுகிறது.

இணைய தள பயனாளர்களின் தினசரி ஆன்லைன் நடவடிக்கைகளில் மோசடி நிபுணர்களின் போலி இணைப்புகளும் நுழைந்து கொண்டிருக்கிறது. YOUTUBE வீடியோ ஒன்றில் அல்லது இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஸ்ட்ரிங்கின் முடிவில், எக்செல் ஸ்ப்ரெட் ஷீட்டில் என்று ஹேக்கர்கள் மோசடி இணைப்புகளை வைத்திருப்பார்கள்

வெப் 2.0 இணையத்தை ஒரு பயனாளர் பார்வையிடும்போது பயனாளரின் பிரவுசர், பின்னணியில் ஏதாவது ஒன்றை கேட்கும் அல்லது வெப் அப்ளிகேஷனுடன் நாம் அறியாமலேயே தொடர்பு கொள்ளும். இதுதான் ஹேக்கர்களுக்கு சவுகரியாமாகிவிடுகிறது.

அதாவது ஒரு நியாயமான இணையதளத்தில் தங்களது மோசடி சமிக்ஞைகளை இவர்கள் இதன் மூலம் ஏற்றி விடுகின்றனர். இந்த சமிக்ஞையை பயனாளர் பிரவுசர் தானாகவே செயல்படுத்தி விடுகிறது என்று அந்த ஆய்வறிக்கை அதன் செய்ல்களை விளக்குகிறது.

கடந்த சில ஆண்டுகளாக உரை வடிவ ஸ்பாம்களை அனுப்புவதை விடுத்து ஹேக்கர்கள் படங்களில் அதன் குறியை ஏற்றியோ அல்லது பிடிஎஃப் ஃபைல்கள் வடிவத்திலோ இத்தகைய மோசடி விவகாரங்களை அனுப்புகிறது. இதன் அடுத்த கட்டம்தான் பயனாளர்களே உருவாக்கும் வீடியோ விஷயங்கள். எனவே எச்சரிக்கை தேவை என்கிறது அந்த ஆய்வு.

சில வேளைகளில் இணையதள வசதி உள்ள மொபைல் ஃபோன்கள் மூலம் வீடியோக்களை பார்க்கின்றனர். இதனால் மொபைல் தரவுகள் கெடலாம் அல்லது ஹேக்கர்கள் உங்கள் செல்பேசியில் உள்ள அனைத்து தகவல்களையும் ஹேக் செய்யலாம்.

இதற்கு தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் என்ன கூறுகிறார்கள் என்றால், வீடியோ தரவுகளையும் அனைத்து மீடியா ப்ளேயர்களையும் கார்ப்பரேட் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படவேண்டும் என்று கூறுகின்றனர்.

Posted by TAMIL on 01:31. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

2 மறுமொழிகள் for "வீடியோ டவுன்லோடுகள் வைரஸ் எச்சரிக்கை தேவை"

  1. தங்களது வலைப்பூ நன்றாக உள்ளது. நானும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தொடரட்டும் உங்களது ஆக்கங்கள்.

    வாழ்த்துக்களுடன்.,
    ஜிஆர்ஜி
    புதுவை.

  2. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி ஜிஆர்ஜி
    புதுவை

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added