|

மேம்படுத்தப்பட்ட நினைவகத்துடன் ஐபாட்

ஐ-பாட் கருவி தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஆப்பிள் நிறுவனம், நினைவகத் திறன் மேம்படுத்தப்பட்ட புதிய ஐ-பாட் மற்றும் ஐ-போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 16 ஜிபி நினைவக திறன் கொண்ட புதிய ஐ-போன் (iPhone) 499 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பு 8 ஜிபி நினைவகம் உள்ள ஐ-போன்கள் மட்டுமே புழக்கத்தில் இருந்தது.இதேபோல் ஐ-பாட் டச் (iPod Touch) கருவியும், 32 ஜிபி நினைவகத் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலையும் 499 டாலர் என ஆப்பிள் நிறுவன செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.இதற்கு முன் புழக்கத்தில் இருந்த ஐ-பாட் டச் கருவிகள், 16 மற்றும் 8 ஜிபி நினைவகத் திறன் மட்டுமே கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.ஆப்பிள் நிறுவனத்தின் ஆன்லைன் மற்றும் சில்லரை விற்பனை மையங்களிலும், அமெரிக்காவின் ஏடி&டி விற்பனை மையத்திலும் புதிய ஐ-போன்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted by TAMIL on 00:50. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "மேம்படுத்தப்பட்ட நினைவகத்துடன் ஐபாட்"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added