|

லேப்-டாப்களுக்கான 500 ஜிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ்

மடிக்கணினி (LAPTOP) தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஹிட்டாச்சி நிறுவனம், 500 ஜிகா-பைட் (Giga Byte) நினைவக திறன் கொண்ட ஹார்ட் டிஸ்ட் டிரைவ்-ஐ உருவாக்கி உள்ளது.இதனை பயன்படுத்தி தொடர்ந்து 500 மணி நேரம் வீடியோ காட்சிகளை பதிவு செய்யவோ அல்லது 10 லட்சம் நிமிடங்களுக்கு பாடல்களை பதிவு செய்யவோ முடியும் என கூறியுள்ள ஹிட்டாச்சி

வெஸ்டர்ன் டிஜிட்டல் கார்ப்ரேஷன் அறிமுகப்படுத்திய 320 ஜிபி நினைவக திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க் டிரைவே, சர்வதேச அளவில் அதிக நினைவக திறன் கொண்டதாக கருதப்பட்டு வந்த நிலையில், 500 ஜிபி நினைவகம் உள்ள ஹார்ட் டிஸ்க் டிரைவ்-ஐ, ஹிட்டாச்சி அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்கிடையில், ஹிட்டாச்சி தயாரித்துள்ள இந்த டிரைவ்களை பயன்படுத்தி ஒரு டெரா பைட் (one Tera Byte) நினைவக திறனுள்ள மடிக்கணினியை அறிமுகப்படுத்த தைவான் நாட்டைச் சேர்ந்த அசுஸ்டெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு அசுஸ் எம்-50 மற்றும் அசுஸ் எம்-70 என பெயரிட்டுள்ள அசுஸ்டெக் நிறுவனம், இவற்றின் விற்பனை விலை குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

Posted by Anonymous on 12:06. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

2 மறுமொழிகள் for "லேப்-டாப்களுக்கான 500 ஜிபி ஹார்ட் டிஸ்க் டிரைவ்"

  1. ஹும்! கிராஷ் ஆச்சுனா அம்புட்டு தான்.எல்லாம் போச்சு.

  2. வடுவூர் குமார் உங்ககள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added